#BREAKING விஜயின் தனி விமானத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
Updated: Apr 10, 2026, 18:54 IST
விஜய்யின் தனி விமானத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
காரைக்குடியில் ரோட் சோவை முடித்துவிட்டு விஜய் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக அவருடைய தனி விமானத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி தியாகேஷ்வரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், விஜய் பயணிக்க உள்ள தனி விமானத்தில் சோதனை செய்தார்கள்.