#BREAKING தமிழ்நாட்டில் ஏப்.23ல் சட்டமன்ற தேர்தல்
Updated: Mar 15, 2026, 16:44 IST
அசாம் மாநிலத்தில் மே 20, கேரளாவில் மே 23, புதுச்சேரி ஜூன் 15, தமிழ்நாட்டில் மே 10, மேற்கு வங்கத்தில் மே.7ல் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “அசாமில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது” என அறிவித்தார்.