×

ஒரே நாளில் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை அதிரடி மாற்றம் - தேர்தல் ஆணையம் அதிரடி..!

 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தற்போது போலீஸ் பயிற்சிக் கழக டிஜிபியாகப் பணியாற்றி வரும் சந்தீப் ராய் ரத்தோர் (Sandeep Rai Rathore, IPS) புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : 

  • சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • தூத்துக்குடி ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு, விஷ்ணு மஹாஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காவல் ஆணையர்கள் மற்றும் ஐஜி மாற்றம்

தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீக்‌ஷித் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.