×

பணப் பட்டுவாடாவை தடுக்க ‘டிரோன்’கள்: தேர்தல் ஆணையம் திட்டம்..!!

 

கடந்த காலங்களில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி, மதுரையில் உள்ள திருமங்கலம் தொகுதி ஆகியவற்றில் தேர்தலின்போது வாக்களிக்க பணப்பட்டுவாடா நடந்ததாகப் பரவலாக புகார்கள் எழுந்தன.

இத்தகைய காரணங்களுக்காக சில தொகுதிகளில் தேர்தல் ரத்தானதும் வரலாறு ஆகும்.

இந்த முறையும் பணப்பட்டுவாடா நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுவதால் தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

‘டிரோன்’கள் மூலம் கண்காணிப்பு எளிதாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழக அரசின் செய்​தித்துறை அதி​காரி​கள் முதல்​வர் ஸ்டா​லினுடன் பாது​காப்பு வாக​னங்​களில் சென்று செய்தி அனுப்​புவது குறித்து தேர்​தல் ஆணை​யத்​துக்கு புகார் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.227 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.737 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள், ரூ.126 கோடி ரொக்கப் பணம், ரூ.295 கோடி மதிப்​புள்ள தங்​கம், வெள்ளி நகைகள், ரூ.75 கோடி போதைப் பொருள்கள், ரூ.2 கோடி மதிப்பிலான மது​பானங்​கள் ஆகியவை அடங்கும்.

உரிய ஆவணங்களை அளித்தவர்களுக்கு ரூ.381 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கப்பணம் ஆகியவை திருப்பித் தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.