இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் இன்று தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரம் நடைபெற வாய்ப்புள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று முதல் நான்கு கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் இரண்டு முதல் மூன்று கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி தொடர்பாக ஆணையர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் ஆலோனை மேற்கொள்கிறார்.. இன்றைய ஆலோசனையில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இறுதி செய்யப்படுகிறது. அட்டவணை இறுதி செய்தவுடன் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது