தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Jun 27, 2025, 17:45 IST
தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2019ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டிவருகிறது. அதன்படி, 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தலில் போட்டியிடாதது குறித்து உரிய விளக்கத்தை சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் பதிலளிக்காத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.