×

 " பெண்களுக்காக பிங்க் வாக்குச்சாவடி" - அசத்தும் தேர்தல் ஆணையம் 

 

சென்னையில் மகளிருக்காக பிங்க் பூத் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள், வாக்களிக்க வசதியாக பெண்கள் நிர்வகிக்கும் 16 பிங்க் பூத் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  அனைத்து அலுவலர்களும் , ஊழியர்களும்,  போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் பிங்க்  வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர்.  

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்கு சாவடி மையம் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று என அமைக்கப்பட்டுள்ளன.  கர்ப்பிணிகள் , கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் , முதியோருக்கு தனித்தனி வரிசை அமைக்கப்படும். இதன் மூலம் பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் எளிதாக வாக்களித்துவிட்டு செல்லும் சூழல் செய்து தரப்பட்டுள்ளது.