#ELECTION BREAKING : வாக்குச்சாவடியில் பயங்கரம்: மதுரை அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து..!
Updated: Apr 23, 2026, 12:02 IST
மதுரை திருமங்கலம் அடுத்த மேலக்கோட்டை பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், வரிசையில் நின்றிருந்த ஒரு பெண்ணிற்கும், அங்கிருந்த மற்றொரு நபருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்ததால், அங்கு வாக்களிக்க வந்திருந்த மக்கள் சிதறி ஓடினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து, தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர்.