×

6 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மூதாட்டி பலி!

 

செங்கல்பட்டில் 6 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மூதாட்டி பலியானதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கத்தில் 6 மணி நேரமாக மின் தடை ஏற்பட்டதால் ஆக்ஸிஜன் உதவியோடு சுவாசித்து வந்த மூதாட்டி பலியானார். காலை 9 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டு பிற்பகல் 3 மணி வரை நீடித்ததால் சிகிச்சை முடிந்து வீட்டில் ஆக்ஸிஜன் கருவி உதவியோடு சுவாசித்து வந்த 75 வயதான மூதாட்டி கருப்பாயி உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் கருப்பாயி செங்கல்பட்டு மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மின்வெட்டு காரணமாக மூதாட்டி கருப்பாயி உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகார் கூறுகின்றனர்.