×


  
தவெகவுக்கு விசிக ஆதரவளிக்கக்கோரி பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட முதியவர்

 

தவெக தலைவர் விஜய்க்கு விசிக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விசிக தொண்டர் பாபு என்பவர் திடீரென பிளேடால் கையில் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அசோக் நகர், 100அடி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவைகம் உள்ளது. இன்று காலை முதலே இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அங்கு வந்த விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த முதியவர் பாபு (வயது70) என்பவர் "என் அண்ணன் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும், விஜய் முதல்வர் ஆக வேண்டும் என்று கூறி ஆளுநர் ஒழிக என்று திடீரென கோஷமிட்டார். பின்னர் திடீரென அவர் பிளேடால் தனது கழுத்து மற்றும் கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து ரத்த காயத்துடன் இருந்த பாபுவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது‌.