×

கொரோனா இருக்கும் போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர் மரணம்? வெளியாகும் பரபரப்பு தகவல்!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கு கடந்த 24 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 3 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளார். இந்த நிலையில் முதியவர் பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா இருக்கும் போதே 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாலும் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் அவர் உயிரிழந்து
 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கு கடந்த 24 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 3 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளார்.

இந்த நிலையில் முதியவர் பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா இருக்கும் போதே 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாலும் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் பாலச்சந்தர் கொரோனா இருக்கும் போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.