×

'எல் நினோ' டூ 'சூப்பர் எல் நினோ'..! தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் பேராபத்து? தமிழக அரசுக்கு வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

 


தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

தமிழக அரசிற்கு முக்கிய கோரிக்கை

==> எல் நினோ உருவாகிவிட்டது, அடுத்த சில மாதங்களில் சூப்பர் எல் நினோ உருவாக உள்ளது. இதன் தாக்கத்தை உலக நாடுகள் தற்போதே எதிர்க்கொண்டு வருகிறது.

==> இந்தியாவிலும் இன்று வரை தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை நிலவிவருகிறது.நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

==> மேட்டூர், முல்லைபெரியாறு போன்ற அனைகள் திறக்கமுடியாத சூழல் நிலவிவருகிறது இந்நிலையில் மேட்டூர், முல்லைபெரியார், பவானிசாகர், அமராவதி போன்ற முக்கிய நீர் நிலைகள் இந்தாண்டு நிரம்ப வாய்ப்பு தெரியவில்லை. எனவே, வரும் கோடையில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க தற்போதே தமிழக அரசு உடனடி நடவடிக்ககை எடுக்க வேண்டும்.

==> சூப்பர் எல் நினோ, பருவமழை  & காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு 2027 ஆம் ஆண்டு கோடை வெப்ப அலை & வறட்சியை எதிர்க்கொள்ள தமிழக அரசு உடனடியாக வறட்சி & நீர் மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களையும், நீர்வளத்துறை அமைச்சர் 
புஸ்ஸி ஆனந்த் அவர்களையும், பேரீடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

==> இந்த குழுவில் வேளாண்மைத்துறை, சுகாதராம் & மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர்வளத்துறை, மின்சாரத்துறை,  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் பேரீடர் மேலாண்மைத்துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள்  இணைந்து சூப்பர் எல் நினோ எதிர்க்கொள்ளும் செயல்திட்டத்தை ஏற்படுத்தி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.