×

முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்: ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு..!!

 

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 23-ந்தேதி முட்டை விலை ரூ.6.80 ஆக இருந்தது. இது முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். இந்த நிலையில், முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த மாதம் 21-ந் தேதி ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

16 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி முட்டை விலை 5 காசுகள் உயர்ந் தது. தொடர்ந்து 7, 8, 9-ந் தேதிகளில் தினமும் 5 காசுகள் உயர்ந்த நிலையில், நேற்று 10 காசுகள் மேலும் உயர்ந்து முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.