×

முட்டை விலை 5 காசுகள் உயர்வு..!

 

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் முட்டைகளுக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 16 நாட்களுக்குப் பின்னர் இந்த 5 காசுகள் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். புதிய விலை நிர்ணயத்தின் மூலம் கோழிப்பண்ணை தொழிலில் உள்ள உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.