முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு..!!
Aug 2, 2026, 19:16 IST
நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக (ரூ.5.70) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக (ரூ.5.40) குறைந்துள்ளது.
ஆடி மாதம் காரணமாக முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதாக விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.