×

முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.


முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல்  விலை இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.6.45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது.  சென்னையில் முட்டையின் விலை ரூ.6.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.