#BREAKING 55 ஆண்டு கால வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சம்
Jul 14, 2026, 18:45 IST
55 ஆண்டு கால கோழி பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை விலை கடந்த 4 நாட்களில் 25 காசுகள் உயர்ந்து ரூ.6.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. நுகர்வு அதிகரிப்பால் வரும் நாட்களிலும் விலை உயரக்கூடும் எனவும் பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.