×

பள்ளிக் கல்வி செயல்திறன் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய தமிழ்நாடு!

2019-20ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டு பட்டியலை (Performance Grading Index) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். மொத்தமாக ஒன்பது கிரேடுகளைக் கொண்டிருக்கும் அப்பட்டியலில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தோமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய ஐந்து மாநிலங்கள்/யுனியன் பிரதேசம் முதல் கிரேடை (Grade A++) பெற்றிருக்கின்றன. தாத்ரா நகர் ஹாவேலி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகியவை இரண்டாம் நிலை கிரேடை பெற்றுள்ளன. லடாக்கை தவிர்த்து
 

2019-20ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டு பட்டியலை (Performance Grading Index) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். மொத்தமாக ஒன்பது கிரேடுகளைக் கொண்டிருக்கும் அப்பட்டியலில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தோமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய ஐந்து மாநிலங்கள்/யுனியன் பிரதேசம் முதல் கிரேடை (Grade A++) பெற்றிருக்கின்றன. தாத்ரா நகர் ஹாவேலி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகியவை இரண்டாம் நிலை கிரேடை பெற்றுள்ளன.

லடாக்கை தவிர்த்து மற்ற யுனியன் பிரதேசங்கள் பெரும்பாலும் தங்களது தரத்தை உயர்த்தியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலனாவை 10% அல்லது அதற்கு மேற்பட்ட அளவிற்கு கல்வி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் முந்தைய ஆண்டை விட 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட முன்னேற்றத்தை செய்து காட்டியிருக்கின்றன. 19 மாநிலங்கள் 10 சதவீதம் அளவிற்கு வளர்ந்துள்ளன.

கற்றல் முடிவுகள், அணுகல், உட்கட்டமைப்பு வசதிகள், கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்துதல், மாநிலங்களிலிருந்து பெறப்படும் சுய அறிக்கை தரவு, மூன்றாம் தர சரிபார்ப்பு உள்ளிட்ட 70 வகையான அளவீடுகளின் அடிப்படையில் மாநிலங்கள் பள்ளிக் கல்வி தர குறியீடு மதிப்பிடப்படுகிறது. இந்த நடைமுறையானது 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017-18 காலக்கட்டத்திற்கான குறியீடு 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது தமிழ்நாடு இரண்டாம் நிலை கிரேட் பெற்றிருந்தது. தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது.