“31 தொகுதியில் போட்டியிட்டு 33,000 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார்.. சீட் தர முடியாது”- கிருஷ்ணசாமிக்கு இபிஎஸ் பதிலடி
புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு ஒருவர் மூலமாக அவர் கேட்ட 5-10 சீட்டுகளையும் தர முடியாது என நாங்கள் சொல்லிவிட்டோம். கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகளின் அடிப்படையிலேயே தொகுதிகள் வழங்கப்படும். கிருஷ்ணசாமி 31 தொகுதியில் போட்டியிட்டு 33,000 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார்... ஆகவே அவர் கேட்ட சீட்டை தர இயலாது என சொல்லிவிட்டோம். தேர்தலில் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு அடிமை என்பதா?. 1099, 2001 தேர்தல்களில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது ஏன்?எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதனால் எங்களை குறைசொல்ல முடியவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அடிமை என்கிறார்கள். டெல்லிக்கு போனால் உங்களுக்கு என்ன பயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.