×

அமித்ஷாவை தனியாக சந்தித்த எடப்பாடி பழனிசாமி

 

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். எப்பொழுதும்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வரும்பொழுது எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளை அழைத்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முறை தன்னந்தனியாக வந்துள்ளார். அமித்ஷாவுடன் தனியாக அவர் சந்திப்பு நடத்துகிறார்.  தேஜ கூட்டணியில் பாஜக 35 தொகுதிகள் கேட்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.