×

அண்ணாவின் திருவுருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!

 

அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.