பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை போற்றி வணங்குவோம் - எடப்பாடி பழனிசாமி
Sep 17, 2023, 10:57 IST
தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். இன்று அவரது 145வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் மலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.