×

தீயசக்தியிடம் சிக்கிய தமிழ்நாட்டை விரைவில் மீட்போம் - எடப்பாடி பழனிசாமி

 

தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 


இந்தியாவில் இருந்து தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் நவம்பர் 01. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தனி மாநிலமாக அமைய போராடிய தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.