உழைப்பின் மூலம் நாட்டின் பெருமையை உயர்த்தும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் - ஈபிஎஸ்
Apr 30, 2023, 12:09 IST
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் மே தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதேபோல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.