×

வெள்ளி விழா கொண்டாடும் இயக்குநர் பாலாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

 

திரையுலக வெள்ளி விழா கொண்டாடும் இயக்குநர் பாலாவுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் திரு. பாலா அவர்களின் திரையுலக வெள்ளி விழாவும், அவர் இயக்கிய 'வணங்கான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வரும் டிசம்பர் 18ஆம் நாள் சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகில், தனது முதல் படத்தையே வணிக நோக்கமின்றி, சமூக நோக்கத்துடன் வெற்றிப்படமாக எடுத்து, இன்று வரை தனது பாணியை யாருக்காகவும் கைவிடாமல், தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார்இயக்குநர் பாலா அவர்கள்.