×

“டெல்டா விவசாயிகளுக்கு தரமான விதைநெல் வழங்குக” தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தரமான விதை நெல் வழங்க எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்த மாண்புமிகு அம்மா அவர்கள் தொடர்ந்து அம்மாவின் அரசும் , கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் ,சலுகைகள் ,உதவிகளை அளித்து வேளாண் பெருமக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது. “காவிரி நீர்
 

தரமான விதை நெல் வழங்க எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்த மாண்புமிகு அம்மா அவர்கள் தொடர்ந்து அம்மாவின் அரசும் , கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் ,சலுகைகள் ,உதவிகளை அளித்து வேளாண் பெருமக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது.

“காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு

குடிமராத்து திட்டத்தின் மூலம் ஆயிரத்து 132 கோடி ரூபாயில் சுமார் 5 ஆயிரத்து 586 நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கப்பட்டது

தானே புயல் நிவாரணம் வறட்சி நிவாரணம் வெள்ள நிவாரணம் சம்பா மற்றும் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பயிர் காப்பீடு என்று கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது

துபாய் 1.6 கோடி விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும் ,அஜாக்கிரதையால் குறித்த காலத்தில் தரமான விதை நெல் மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக, சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் செய்து வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே ஊரை சேர்ந்த விவசாயி வீரமணி தனது ஒன்பது ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கரில் தனியாரிடமிருந்து ஏ.டி 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும் மீதமுள்ள இரண்டு ஏக்கருக்கு செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்ததாகவும் ஏறத்தாழ கிடைத்து 12 நாட்கள் ஆகியும் திமுக அரசு வழங்கிய விதைகள் முளைக்க வில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி வீரமணி வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும் வீணாகி விதை நாற்று உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

அதேபோல் வேறு எங்கேனும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து உள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதைகள் விவசாய தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.