☰
×

"வி.எஸ்.பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்"- ஈபிஎஸ் 

 

கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 22 வரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நலன் தேறி வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் வந்தன. அதன்பின் எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 70 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.  இந்நிலையில் இன்று கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு  உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எதுவும் பலனளிக்கவில்லை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், "கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.