×

‘தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர் காமராஜர்’ : எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

காமராஜர் 1903 ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். இவர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த இவர் தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவருக்கு தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று பல பெயர்கள் உண்டு. பாரத மிகு மின் நிறுவனம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,மணலி சென்னை
 

காமராஜர் 1903 ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். இவர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த இவர் தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இவருக்கு தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று பல பெயர்கள் உண்டு. பாரத மிகு மின் நிறுவனம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது தான். காமராஜரின் மறைவுக்கு பின், 1976 இல் மத்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ” கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்”என்று பதிவிட்டுள்ளார்