×

ஆளுநரின் ஒப்புதல் இன்றி அவசரமாக அரசாணை வெளியிட்டது ஏன்? – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத
 

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைக்க கால தாமதமாவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசாணை வெளியீடு குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. #NEETReservation” எனக் குறிப்பிட்டுள்ளார்.