×

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்தலைவருமான திரு. பிராணாப் முகர்ஜி அவர்கள் உடல் நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (31.8.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். திரு. பிராணாப் முகர்ஜி அவர்கள், இந்தியாவின் ஜனாதிபதியாக
 

குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்
தலைவருமான திரு. பிராணாப் முகர்ஜி அவர்கள் உடல் நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (31.8.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். திரு. பிராணாப் முகர்ஜி அவர்கள், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வைரவிழா, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா உள்ளிட்டு பல விழாக்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடன், தலைமை விருந்தினராக திரு. பிராணாப் முகர்ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தவர். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டுவரான திரு. பிராணாப் முகர்ஜி அவர்கள் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிராணாப் முகர்ஜி அவர்களின் மறைவு இந்தியாவிற்கே ஒர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.