×

“திட்டுமிட்டு சதி செய்து அண்ணாவை இறக்கிவிட்டு முதலமைச்சரானவர் கருணாநிதி” முதல்வர் தாக்கு

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களப்பணியில் அதிரடியாக களமிறங்கிவிட்டது அரசியல் கட்சிகள். ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், இரண்டு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக 3 ஆண்டுகளாக திறம்பட தமிழகத்தை வழி நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுற்றுபயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
 

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களப்பணியில் அதிரடியாக களமிறங்கிவிட்டது அரசியல் கட்சிகள். ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், இரண்டு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக 3 ஆண்டுகளாக திறம்பட தமிழகத்தை வழி நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

அந்தவகையில் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுற்றுபயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “திமுகவில் அண்ணா முதல்வராக இருந்த போது திட்டமிட்டு சதி செய்து கருணாநிதி முதலமைச்சரானார். அவரை மக்கள் தேர்வு செய்யவில்லை. நாவலன் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் கருணாநிதி பொறுப்பேற்றார். எங்களை குறை சொல்வதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்குற்றச்சாட்டுகளை மறைக்க ஸ்டாலின் எங்களை குறைக் கூறுகிறார். எங்கள் அமைச்சர்கள் யார் மீதும் வழக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை முடித்துவிட்டு விவாதிக்குமாறு ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் ஏன் விவாதிக்க பயப்பட வேண்டும். நான் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சீல் வைத்து அறிக்கையை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் இது குறித்து விசாரிக்க தேவையில்லை என உத்தரவிட்ட பிறகும் ஸ்டாலின் ஏன் விவாதிக்க தயங்குகிறார்.

அதிமுகவிற்கும் அரசுக்கும் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதை ஸ்டாலினால் பொறுத்துகொள்ள முடியவில்லை. திருநெல்வேலியில் சாலையே போடப்படவில்லை. ஆனால் இதில் ஊழல் நடந்திருப்பதாக தவறான தகவல்களை ஸ்டாலின் பரப்பி வருகிறார். எனது உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக கூறும் ஸ்டாலின் திமுக ஆட்சியின் போது அவரது உறவினர்கள் 8 பேருக்கு டெண்டர் கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் இடெண்டர் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் விவரங்களை தெரிந்து கொண்டு மக்கள் மத்தியில் பேச வேண்டும். உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் இருந்தால் இடையூராக இருக்கும் என்பதற்காக அவர்களை சிறைக்கு அனுப்ப இருக்கிறார். அதிமுக அரசு நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறது.வரும் தேர்தலில் மக்களுக்கு சிறப்பான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிடும்” எனக் கூறினார்.