×

முதல்வர் என்பது ஒரு பணி தான்.. பதவி ஆசை இருக்கலாம் வெறி இருக்கக்கூடாது: முதல்வர் பழனிசாமி

நாகர்கோவில் அறுமணயில் நடைபெற்று வரும் கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் கொடுத்து வருகிறோம். சட்டபடி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காத காரணத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.தேசிய அளவில் நீர் மேலாண்மை சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறோம். வேளாண்மை தொழில் சிறக்க பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். கொரோனா காலத்திலும் 60,000 கோடி முதலீட்டில் தொழில்
 

நாகர்கோவில் அறுமணயில் நடைபெற்று வரும் கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் கொடுத்து வருகிறோம். சட்டபடி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காத காரணத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.தேசிய அளவில் நீர் மேலாண்மை சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறோம். வேளாண்மை தொழில் சிறக்க பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். கொரோனா காலத்திலும் 60,000 கோடி முதலீட்டில் தொழில் வளர்ச்சி கொண்டு வந்துள்ளோம். திமுக ஆட்சியில் மின் வெட்டு கடுமையாக இருந்தது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாகி உள்ளோம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் நோக்கில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழகம். வருங்காலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆக அடிதளம் போட்ட அரசு அதிமுக அரசு .

முதல்வர் என்பது என்னை பொறுத்த வரை பணி தான். பதவிக்கு ஆசை படுபவன் நான் அல்ல. முதல்வர் பதவி மீது ஆசை இருக்கலாம் ஆனால் வெறி இருக்க கூடாது. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறவன், ஒரு மதத்தை மட்டும் நேசித்து மற்ற மதத்தை தவறாக பேசுபவன் நான் இல்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பில் உள்ள மீனவர்களுக்கு 75% மானியத்துடன் செயற்கை கோள் அலைபேசி கொடுத்தது நம் தமிழக அரசு. ஜெருசேலம் செல்வதற்கு இதுவரை இருந்த 20,000 ரூபாய் உதவி தொகையை 37,000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு” எனக் கூறினார்.