×

பல குடும்பங்களை கமல் சீரழிக்கிறார்; பிக்பாஸ் பார்க்கும் குடும்பம் சீரழிஞ்சிடும்- முதல்வர் பழனிசாமி

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “படம் மற்றும் நாடகங்கள் மூலம் பல குடும்பங்களை கமல் சீரழிக்கிறார். இந்திய அளவில் திட்டங்களை செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மக்களுக்கு எளிதில் சென்றடையும் விதமாக மினிகிளினிக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தமிழகத்தில் சிறப்பாக தானே செயல்படுகிறது. கமல்ஹாசன் ஒய்வு பெற்ற பிறகு அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நடத்திவருகின்றார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் ஒரு
 

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “படம் மற்றும் நாடகங்கள் மூலம் பல குடும்பங்களை கமல் சீரழிக்கிறார். இந்திய அளவில் திட்டங்களை செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மக்களுக்கு எளிதில் சென்றடையும் விதமாக மினிகிளினிக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை தமிழகத்தில் சிறப்பாக தானே செயல்படுகிறது‌. கமல்ஹாசன் ஒய்வு பெற்ற பிறகு அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நடத்திவருகின்றார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லாயிருக்காது. அப்படி பட்ட தலைவருக்கு கருத்து சொல்ல முடியுமா? பிக்பாஸில் என்ன இருக்கிறது என அதை கமல் நடத்திவருகிறார்.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர் அவர் அல்ல. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவர் வேலை. இந்த தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டு போகும் நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போகும் எம்.ஜி.ஆர் எவ்வளவு நல்ல படமாக எடுத்தார். கமல் ஒரு படமாவது நல்ல எடுத்துள்ளாரா?” எனக் கூறினார்.