×

விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை; யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்- முதலமைச்சர் பழனிசாமி

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மியால் பலரால் தற்கொலை செய்துக்கொண்டதால் அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த விளையாட்டை தடை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன்
 

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மியால் பலரால் தற்கொலை செய்துக்கொண்டதால் அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த விளையாட்டை தடை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுக்கள், பொதுமக்களின் நலன்கருதி ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஈடுபடுவார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை, இந்தியா ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் எனக் கூறினார்.