☰
×

நேரம் வரும்போது பொதுக்குழு கூட்டப்படும்- எடப்பாடி பழனிசாமி
 

 


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசால் முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளர்.


திருச்சியில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், காவிரி நீரை முறையாக நிர்வகிக்காததால் விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. பிரதமரிடம் பேசும்போதாவது காவிரி நீர் குறித்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் குறித்து எந்த அக்கறையும் முதல்வருக்கு இல்லை.


20 மாவட்ட மக்கள் காவிரி நீரை நம்பியுள்ளனர். சம்பா சாகுபடிக்கு ஜனவரி வரை தண்ணீர் தேவை. அரிசி, சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை. விவசாயிகளை காப்பாற்ற தவெக அரசு தவறிவிட்டது. விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதனர். ஒவ்வொரு வருசமும் அதிமுக பொதுக்குழு கூட்டுவோம். அதன்படி அதற்கான நேரம் வரும்போது பொதுக்குழு கூட்டப்படும்.
நம் முன்னால் எழுந்திருக்கும் அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்.” என்றார்.