×

“அதிமுகவினர் யாரும் உயிரை மாய்க்க வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

 

தேர்தலில் அதிமுக தோற்ற விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடைந்து கண்ணீர் விட்டு அழுதார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கடுமையான காயத்தோடுதான் உங்கள் முன் நிற்கிறேன்.. விசுவாசமிக்க தொண்டர்.. தன்னையே இயக்கத்திற்கு அர்ப்பணித்து கொண்டிருக்கும் தொண்டனை இழந்து இருக்கின்றோம். மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்படிப்பட்ட செயல்களில் இனி ஈடுபட வேண்டாம் என பாதம் பணிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அதிமுக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அணி - சி.வி.சண்முகம் அணியாக பிரிந்தது. இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.,க்களும், சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.,க்களும் இருந்தனர். இதனிடையே சி.வி.சண்முகம் அணியில் இருந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாயினர்.  அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் தொண்டர்களிடையே மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் தற்கொலை செய்துகொண்டார்.