×

அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் - ஈபிஎஸ் 

 

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வாகியுள்ள நிலையில் ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், நேற்று திருவேற்காடு - GPN பேலஸ் திருமண மண்டபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.