×

உண்மையாக உழைத்து பதவி வரவேண்டும்; குறுக்கு வழியில் வரக்கூடாது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எத்தனை சதி திட்டம் திட்டினாலும் அதை அதிமுக உடைக்கும். உண்மையாக உழைத்து பதவி வரவேண்டும். அதிமுக வலுமிக்க இயக்கம், தீய சக்தி திமுகவை வீழ்த்தும் என்று சபதம் ஏற்று உள்ளனர் அதிமுகவில் உள்ள இளைஞர்கள். தேவர் இனத்தை நேசித்தவர்கள் எம்ஜிஆரும் /அம்மாவும். இருவேறு தலைவர்களும் பல்வேறு அறிவிப்புகளை விட்டு அதனை நிறைவேற்றியவர்கள் தேவருக்கு தங்க கவசம் அணிவித்தவர் அம்மா, தேவருக்கு
 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எத்தனை சதி திட்டம் திட்டினாலும் அதை அதிமுக உடைக்கும். உண்மையாக உழைத்து பதவி வரவேண்டும். அதிமுக வலுமிக்க இயக்கம், தீய சக்தி திமுகவை வீழ்த்தும் என்று சபதம் ஏற்று உள்ளனர் அதிமுகவில் உள்ள இளைஞர்கள். தேவர் இனத்தை நேசித்தவர்கள் எம்ஜிஆரும் /அம்மாவும். இருவேறு தலைவர்களும் பல்வேறு அறிவிப்புகளை விட்டு அதனை நிறைவேற்றியவர்கள் தேவருக்கு தங்க கவசம் அணிவித்தவர் அம்மா, தேவருக்கு அரசு விழா அறிவித்தவர் எம்ஜிஆர். நான் கிராமத்தில் பிறந்தவன் கிராமத்துச் சூழலை பற்றி தெரியவும்.

கொரோனாவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அரசு தமிழக அரசு. வேகமாக துரிதமாக செயல்பட்டு நிறைய, கொரோனா பரிசோதனை நிலையம் அமைத்து அதனை கட்டுபாட்டில் கொண்டுவந்தது அரசு. குறுக்கு வழியில் பதவி வர நினைத்தால் எதிர்கட்சியால் வரமுடியாது. முதுகுளத்தூர் தொகுதியில் 12 மினி கிளினிக்கள் தொடங்க உள்ளோம். அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருது பெற்ற அரசு அம்மா அரசு. தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாததால் பல்வேறு பகுதியில் இருந்து 60 கோடியில் தொழில் தொடங்க வந்துள்ளனர். ராமநாதபுரம் அடுத்த 4 ஆண்டுகளில் தஞ்சையா, நாகப்பட்டினமா என்று கேட்கும் அளவிற்கு மாறும். 4 ஆண்டுகளில் தண்ணீர் பிரச்சனை இல்லாத மாவட்டமாக மாற்றி விடுவோம்.

கிராமத்தில் இருந்து நகரம் வரை என்ன தேவையோ அதை செய்து வருகிறோம். 1000 கோடியில் சேலத்தில் கால்நடை பூங்கா உருவாக்கி உள்ளோம். ராமநாதபுரம் மாவட்டம் எஃகு கோட்டை . அனைவரும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்” என சொல்லி உரையை முடித்தார்