×

2026ல் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி..!

 

 நாமக்கல் குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

53 மாத திமுக ஆட்சியில் திருச்செங்கோட்டிற்கு ஒன்றுமே செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, 55 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்திருந்த கோவை மேம்பால கட்டடப் பணிகளை இத்தனை காலமாக கிடப்பில் போட்டிருந்தனர். தற்போது ஆட்சி முடியும் தருவாயில் அதை நிறைவு செய்து ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்

திருச்செங்கோடு - நாமக்கல் 2 வழிச்சாலையை ரூ.135 கோடியில் 4 வழிசாலையாக மாற்றியது அதிமுக அரசு. குமாரபாளையத்தில் விவசாயம், கைத்தறி, விசைத்தறி தொழில்கள் சரிந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வலிமையானது என முதல்-அமைச்சர் நினைக்கிறார். அது வெற்று கூட்டணி.

அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை. ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகம் போராட்ட களமாக உள்ளது. 2026ல் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவானதாக இருக்கும். 2011 முதல் 2021 வரை பொற்கால ஆட்சியை அதிமுக கொடுத்த‌து.

இவ்வாறு அவர் கூறினார்.