×

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள எஸ்.டி.பிஐ கட்சியின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் எஸ்.டி.பிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைசி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள எஸ்.டி.பிஐ கட்சியின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
தமிழ்நாட்டில் சென்னை, கேரளாவில் திருவனந்தபுரம், கர்நாடகாவில் பெங்களூரு, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, தானே உள்ளிட்ட நாடு முழுவதும் 12 இடங்களில் எஸ்.டி.பிஐ கட்சியின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.