அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு..!
Aug 10, 2026, 07:20 IST
அமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் கடந்த 2024ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் ஆகஸ்ட் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஏசிசி எனப்படும் அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, அடுத்தாண்டு ஆகஸ்ட் 13ம் தேதி வரை அவர் இந்தப் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நிறைவு நாளான அடுத்தாண்டு ஜூலை 31ம் தேதி வரையிலோ அல்லது மறு உத்தரவு வரும் வரையில் அவர் இந்தப் பணியில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.