சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வு?? அலறியடித்து வெறியேறிய ஊழியர்கள்..
Oct 24, 2024, 12:27 IST
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டதாக பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறினர். முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பரவிய வதந்தியால் ஊழியர்கள் வெளியேறியதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.