ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா..?
Aug 6, 2026, 06:45 IST
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பை, தமிழக அரசு வழங்குகிறது. இதனால், பெரும்பாலான குடும்பத்தினர், ரேஷன் கார்டுகளை வாங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அனைத்து வகையிலும் சேர்த்து, மொத்தம், 2.28 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
தமிழக அரசு ஆக.5ல் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மாநிலத்தின் மொத்த கடன் நிலுவை, 10.98 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் அரசு, 4.80 லட்சம் ரூபாயை கடனாக வைத்துள்ளது.