இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே! அசத்தும் அமைச்சர் ராஜ்மோகன்
மக்கள் மனுக்களை எளிதாகவும் விரைவாகவும் அளிக்க உதவும் வகையில், அமைச்சர் ராஜ்மோகன் அலுவலகத்தில் E-Petition System அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனின் அறைக்கு வெளியே டிஜிட்டல் மனு பெறும் கருவி பொருத்தப்பட்டிருப்பது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இனி மனுதாரர்கள் நேரடி டிஜிட்டல் முறையில் மனுக்களை பதிவு செய்ய முடிவதால், காத்திருப்பு நேரமும் நடைமுறை சிரமங்களும் குறையும். மக்களின் கோரிக்கைகள் விரைவாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சென்றடைய இந்த முயற்சி பெரிதும் உதவும். அப்பாயின்மெயின்ட் விவரங்கள் உள்ளிட்டவை மனுதாரர் போனுக்கே குறுந்தகவலாக வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன், “கொள்கையை விட்டுக் கொடுத்து நிதி வாங்க மாட்டோம். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டையுமே
இரு கண்களாக அரசு பார்க்கும் தனியாரைப் போல் அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவோம். கல்வித்துறையில் தேவையற்ற பண இழப்புகளை குறைப்போம். பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்யும் தவெக நிர்வாகிகளை எவ்வித சமரசமும் இன்றி கட்சியில் இருந்து விலக்குவோம். இனியும் இது தொடர்ந்தால் நடவடிக்கை தொடரும்” என்றார்.