×

#DuraiMurugan நெருங்கி வரும் தேர்தல்: துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை: மத்திய மாநில அரசுகளின் சதியா?

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர் காட்பாடி: திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர் தேர்தல் களம்: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதனால் மகனுக்காகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் துரைமுருகன். வருமானவரி சோதனை: இந்நிலையில் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில்
 

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்

காட்பாடி: திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்

தேர்தல் களம்:

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதனால் மகனுக்காகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் துரைமுருகன். 

வருமானவரி சோதனை:

இந்நிலையில் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு துரைமுருகன் வீட்டிற்கு வந்த மூன்று பேர் கொண்ட குழு சோதனையிட  வந்துள்ளதாகக் கூறினர். இதையடுத்து அங்கு வந்த துரைமுருகனின் வழக்கறிஞர்கள், சோதனைக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகளில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாகக் கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். சுமார்  4 மணி நேரம் இந்த வாக்குவாதமானது நீடித்தது. 

கல்லூரியிலும் சோதனை? 

இதையடுத்து கூடுதலாக 3 அதிகாரிகளுடன் துரைமுருகனின் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.இதைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போல்   வாணியம்பாடியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது

திமுகவினர் குற்றச்சாட்டு 

துரைமுருகன் வீட்டில் நடத்தும் இந்த திடீர் வருமானவரி சோதனையால் அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் கூடினர். இதனால் அப்பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகி வீட்டில்  வருமானவரித் துறையினர் சோதனை செய்வது மத்திய மாநில அரசுகளின் சதித்திட்டமே என்று திமுகவினர் குற்றச்சாட்டி வருகின்றனர். 

இதையும் வாசிக்க: கணவனை கொன்ற மனைவி: கழிவுநீர் தொட்டியில் சடலத்தை மறைத்து நாடகமாடியது அம்பலம்!