☰
×

நாளை மறுநாள் திமுக எம்பிக்கள் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நாளை மறுநாள் (செப்.23) காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.