×

முதல்வரின் காலை உணவு திட்ட பெயரை மாற்றியது முறையல்ல- துரைமுருகன்

 

முதல்வரின் காலை உணவு திட்ட பெயரை மாற்றியது முறையல்ல என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “முதல்வரின் காலை உணவு திட்ட பெயரை மாற்றியது முறையல்ல. காமராஜர் கொண்டு வந்தது மதிய உணவுத்திட்டம். அத்திட்டத்துக்கு பெயர் மாற்றம் செய்திருந்தால்கூட பரவாயில்லை. அதனை விரிவுப்படுத்தியது என்.டி.ஆர். அவரது பெயரை வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தது மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றுவது முறையல்ல. திட்டங்களுக்கு பெயரை மாற்றுவதற்கு பதில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.