“என்னால நடக்க முடியலயா? பழனிசாமியை பந்தயத்திற்கு வரச்சொல்லுங்க”- துரைமுருகன் சவால்
எடப்பாடியை என்னோடு நடை போட்டி பந்தயத்திற்கு வர சொல்லுங்கள் என வேட்புமனுதாக்கல் செய்த பின்பு துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 13வது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 11-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.*செங்குட்டையில் இருந்து திமுக கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஆரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பேச துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. அவரால் நடக்கவே முடியவில்லை, பெருமைக்காக போட்டியிடுகிறார் என இபிஎஸ் பேசி இருக்கிறார். எடப்பாடி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் எடப்பாடியை என்னோடு நடை போட்டிக்கு பந்தையத்துக்கு வர சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார். உங்களோட பிரச்சாரம் எப்படி போகிறது மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது என கேட்டதற்கு வாங்களேன் நீங்களே வந்து பாருங்கள் என அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் தெரிவித்தார்.