“திருமாவுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை; மகிழ்ச்சியோடு இருக்கிறார்”- துரைமுருகன்
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான், அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகனிடம், அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கிறோம், பிரிட்ஜ் கொடுக்கிறோம், மாசம் 2000 ரூபாய் கொடுக்கிறோம், வருஷத்துக்கு மூணு சிலிண்டர் தரோம்னு அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்காங்களே என கேள்வி எழுப்பப்பட்டது... இதற்கு இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை, அதில் இது ஒன்று என கூறினார். அதேபோல சீமான் நேத்து சொல்லியிருக்காரு, கனிமொழி அவர்களுக்கு மாநில அளவில சீட் கொடுக்க மாட்டாங்க, ஏன்னா அவங்க ஒரு திறமையான பெண், அவங்களுக்கு கொடுத்தா உதயநிதிக்கு பாதிப்பு ஏற்படும்னு சீமான் தேர்தல் பிரச்சாரத்துல சொல்லியிருக்காரு என்ற கேள்விக்கு... அதைப்பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
இப்போ அதிமுக தேர்தல் அறிக்கையில பத்திரிகையாளர் நலன் கருதி சில சலுகைகள் கொடுத்திருக்காங்க. அதுபோல நம்ம தேர்தல் அறிக்கையில பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது வருவதற்கு வாய்ப்பு இருக்கா ? மருத்துவக் காப்பீடு மற்றும் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் அதிமுக அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு, தேர்தல் அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அந்தக் குழுவில் நான் இல்லை இப்போ அதைப்பற்றி சொல்ல முடியாது. அதிமுக நிறைய தேர்தல் அறிக்கைகளை அள்ளி விட்டுருக்காங்க, ஆனா அதற்குரிய நிதி கிடைக்குமா? ஏற்கனவே திமுக நிறைய கடன் வாங்கி 9 லட்சம் கோடியைத் தாண்டிடுச்சுன்னு சொல்றாங்க, இவங்க தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பல லட்சம் கோடி செலவாகும், இதைப்பற்றி உங்க கருத்து என்ன? அவங்க ஆட்சிக்கு வரப்போறது இல்லை. சும்மா ஏதோ ஒன்னு சொல்லிட்டுப் போறாங்க. அது வெறும் வெத்து வேட்டு தான். உங்க கூட்டணியில இருக்கிற ஒரே தலித் தலைவர் திருமாவளவன் மட்டும்தான். அவருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏன் இவ்வளவு இழுபறி மற்றும் காலதாமதம்? அவரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்திருக்காரே என்ற கேள்விக்கு, அவருக்கு ஒன்னும் வருத்தம் இல்லை, எங்க பக்கத்துல மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார் என்றார்.