×

“உதயநிதியை வைத்து எல்லாம் அரசியல் செய்ய முடியாது என கே.என் நேரு சொன்னார்”- துரை வைகோ

 

மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்றும், கலைஞர் காலத்தோடு அரசியல் முடிந்துவிட்டதாகவும் கூறியவர் நேரு என மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ திமுகவுக்கு வந்துவிடுவதாக கூறியதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறிய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள  மதிமுக எம்பி துரை வைகோ, “நான் திமுகவில் இணைய விரும்பினேன் என கே.என்.நேரு கூறியது கட்டுக்கதை. திமுகவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை. என்னை அடிக்க அடிக்க இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவேன். தன்னுடன் இருந்த திமுகவின் முக்கிய புள்ளிகளை காலி செய்தவர் நேரு. 


கலைஞர் காலத்தோடு அரசியல் முடிந்து போச்சு, இந்த பையன வைத்து எல்லாம் அரசியல் செய்ய முடியாது' என்று இன்றைய எதிர்க்கட்சி தலைவரைப் பற்றி கே.என்.நேரு பேசினார். இதுதான் அவர். இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை. என் தந்தை விருப்பத்திற்கு ஏற்ப நான் அரசியலுக்கு வந்தேன். நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வது தமிழ்நாட்டிற்கு சுற்றுலா மற்றும் முதலீடுகளை பெற்றுத்தரும். நான் சிறுமைப்படுத்தும் அரசியல் செய்ய மாட்டேன், பதிலுக்கு ஏதாவது செய்தால் இதற்காக முழு நேரத்தையும் ஒதுக்கி செயல்படுவேன். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். வேறு சின்னத்தில் நின்றால் திமுகவினர் ஒத்துழைக்க மாட்டார்கள் எனவும் கூறினர். செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டேன். திமுகவுடன் கூட்டணியில் இருந்த போதும், இப்போதும் என்னை பற்றி கீழ்த்தரமாகவும் அவதூறுவாகவும் பேசுகின்றனர். திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் தோல்விக்கு கே.என்.நேருவே முக்கியக் காரணம். சொந்த கட்சியினரையே உள்குத்து வேலைகள் செய்து தோற்கடிக்கும் போக்கில் கே.என்.நேரு செயல்பட்டதால் அன்பில் மகேஷ் வெற்றி வாய்ப்பை இழந்தார். யாரும் என்னை மிரட்ட முடியாது.. இந்தப் பண்ணையார் அரசியல் இதெல்லாம் என்கிட்ட நடக்காது. என்னை மதிச்சா மதிப்பேன்” என்றார்.